Sunday, 27 April 2014

யார் தமிழின துரோகி....?



யார் தமிழின துரோகி....?


" ஈழத்தில் அட்டூழியம் செய்துவிட்டு இந்திய திரும்புகின்ற இந்திய அமைதிப்படையை நான் வரவேற்க மாட்டேன்" என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி வரவேற்க மறுத்ததற்காகவும் , இந்தியாவின் ரகசியங்களை போராளிகளுக்கு கசியவிட்டார் என்பதற்காகவும்தான் 1991-ல் தி.மு.க. அரசு கலைக்கப் பட்டது. ஆதாரம் வேண்டுமானால் ஜனாதிபதி மாளிகை மற்றும் பாராளுமன்ற ஆவனங்களை வைத்து சரி பார்க்கலாம்.
உடனே நடந்த சட்டசபைத் தேர்தலில்.....தமிழக மக்கள்....குறிப்பாக இன்று கருணாநிதியை இனத்துரோகி என்று திட்டும் தமிழ்தேசியவாதிகள் குறிப்பாக.....நெடுமாறன் உட்பட மற்ற சில்லறை தலைவர்கள் எல்லாம் திமுக விற்கு துணை நிற்காமல் தோற்கடித்தார்களே....உண்மையில் இவர்கள் அல்லவா தமிழின துரோகிகள்?.....இவர்களுக்கு கருணாநிதியை குற்றம் சொல்ல என்ன தகுதி இருக்கிறது ?........
1999-ல் குஜ்ரால் அரசு பதவியிரங்கியதற்கு காரணம் ராஜிவ் படுகொலைக்கு தி.மு.க. உதவியது என்ற ஜெயின் கமிஷன் அறிக்கையினால்தான்.ஆக அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்கு மட்டும் தி.மு.க. பலிகொடுப்பார்கள் இந்த பரதேசிகள். அரசியல் ஆதாயத்திற்கு மட்டும் அம்மாவை முன்னிலை படுத்துவார்கள் !! என்னே இனப் பற்று ?
2009ல் நடந்த இனப்படுகொலை.......கருணாநிதி தன் குடும்பத்தோட தீக்குளித்து மாண்டுபோயிருந்தாலும் கூட ....தடுத்திருக்க முடியாது....நடந்தே இருக்கும்....சர்வதேச சமுதாயமும் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டு நின்றது என்பது அறிவு இருக்கின்ற .....நேர்மையான.... எவருக்கும் தெரிந்த உண்மைதான்.... ! சதா கருணாநிதியை தூற்றிக்கொண்டு இருக்கவே பிறந்தவர்களுக்கு எதோ இது ஒரு சாக்கு...அவ்வளவுதான்..!
இவர்கள் நோக்கம் தமிழ் ஈழம் அல்ல....கருணாநிதியை தூற்ற வேண்டும்...அவ்வளவே....!

No comments:

Post a Comment