Thursday, 27 November 2014

நிஜமான போராளி......!


நிஜமான போராளி......!







   ராஜ பரம்பரை குப்பத்து மக்களுக்காக குரல் கொடுத்தது. உயர் குடி பிற்படுத்தப்பட்ட மக்கள் நலன் காக்க தன் உயர் பதவியையும் இழந்தது.அடிமைப்படுத்தபட்டவன்,ஒடுக்கப்பட்டவன் தன் உரிமைக்காய் போராடினால் அதில் நியாயம் உண்டு.அம்பேத்கர் அப்படிப்பட்ட ஒரு போராளி. சுகபோகமான வாழ்கையை உதறி,கேன்சர்,கிட்னி போன்ற கொடிய காலன்களையும் கூடவே வைத்து கொண்டு கடைசிவரை சமுதாயத்தில் நிலவி வந்த சமுதாய ஏற்ற தாழ்வை சமன் செய்ய போராடி போலி போராளிகளாலும்,முதுகில் குத்திய அரசியல் குள்ளநரிகளாலும், மதம் பிடித்த மத யானைகளாலும் அரசியலை விட்டு ஓரங்கட்டபட்ட சிங்கம்...நிஜ சிங்கம்..விசவநாத் பிரதாப் சிங்..வி பி சிங்.அவர்கள் மறைந்த தினம்..நவம்பர் 27.... மும்பை குண்டு வெடிப்பு சம்பவமும் இதே நாளில் நடக்க (27.11.2008)... அவரது மறைவு பெரியளவில் பேசப்படாமல் இருட்டடிக்கப்பட்டது.

       பெரியாரை பற்றி பேச ஆரம்பித்தால் இங்கே(தமிழகம்) பலருக்கு முதுகில் அரிப்பெடுக்கும்...நூல் கொண்டு அரிப்பை போக்கி கொள்வார்.... வடக்கே மண்டல் என்றாலோ வி பி சிங் என்றாலோ தீ குளிப்போம் என்பார்கள்...நூலும்/நூலுக்கு அடிமையானவர்களும்.

Sunday, 27 April 2014

 பிஜேபி வெங்காய கூட்டம்.....!

எல்லா டிவிகளிலும் விவாதம் என்ற பெயரில் ஒரு கட்சிக்கு ஆதரவாகவே விவாதம் நடகின்றது...என்பது snuggy போடும் தம்பி,பாப்பாவுக்கு கூட தெரியும்.ஆனாலும் இந்த பிஜேபி/இந்து வெறியனுங்க பண்ணுற அலப்பரையை  தான் தாங்க முடியல.
எந்த கேள்விய கேட்டாலும்,எல்லாவித கேள்விக்கும், ஒரே பதில்...."மோடி வந்தா சரியாகிவிடும்...மோடி வந்தால் மீனவர் பிரச்னை தீரும்,மோடி வந்தால் ஈழ பிரச்சனை தீரும்" இந்த பதில் தான் எல்லா கேள்விக்கும்.அது என்ன மீனவ பிரச்சனை என்று எனக்கு புரியவில்லை...!இன்னைக்கு இது தான் தலையாய பிரச்சனையா?.

யார் தமிழின துரோகி....?



யார் தமிழின துரோகி....?


" ஈழத்தில் அட்டூழியம் செய்துவிட்டு இந்திய திரும்புகின்ற இந்திய அமைதிப்படையை நான் வரவேற்க மாட்டேன்" என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி வரவேற்க மறுத்ததற்காகவும் , இந்தியாவின் ரகசியங்களை போராளிகளுக்கு கசியவிட்டார் என்பதற்காகவும்தான் 1991-ல் தி.மு.க. அரசு கலைக்கப் பட்டது. ஆதாரம் வேண்டுமானால் ஜனாதிபதி மாளிகை மற்றும் பாராளுமன்ற ஆவனங்களை வைத்து சரி பார்க்கலாம்.
உடனே நடந்த சட்டசபைத் தேர்தலில்.....தமிழக மக்கள்....குறிப்பாக இன்று கருணாநிதியை இனத்துரோகி என்று திட்டும் தமிழ்தேசியவாதிகள் குறிப்பாக.....நெடுமாறன் உட்பட மற்ற சில்லறை தலைவர்கள் எல்லாம் திமுக விற்கு துணை நிற்காமல் தோற்கடித்தார்களே....உண்மையில் இவர்கள் அல்லவா தமிழின துரோகிகள்?.....இவர்களுக்கு கருணாநிதியை குற்றம் சொல்ல என்ன தகுதி இருக்கிறது ?........
1999-ல் குஜ்ரால் அரசு பதவியிரங்கியதற்கு காரணம் ராஜிவ் படுகொலைக்கு தி.மு.க. உதவியது என்ற ஜெயின் கமிஷன் அறிக்கையினால்தான்.ஆக அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்கு மட்டும் தி.மு.க. பலிகொடுப்பார்கள் இந்த பரதேசிகள். அரசியல் ஆதாயத்திற்கு மட்டும் அம்மாவை முன்னிலை படுத்துவார்கள் !! என்னே இனப் பற்று ?
2009ல் நடந்த இனப்படுகொலை.......கருணாநிதி தன் குடும்பத்தோட தீக்குளித்து மாண்டுபோயிருந்தாலும் கூட ....தடுத்திருக்க முடியாது....நடந்தே இருக்கும்....சர்வதேச சமுதாயமும் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டு நின்றது என்பது அறிவு இருக்கின்ற .....நேர்மையான.... எவருக்கும் தெரிந்த உண்மைதான்.... ! சதா கருணாநிதியை தூற்றிக்கொண்டு இருக்கவே பிறந்தவர்களுக்கு எதோ இது ஒரு சாக்கு...அவ்வளவுதான்..!
இவர்கள் நோக்கம் தமிழ் ஈழம் அல்ல....கருணாநிதியை தூற்ற வேண்டும்...அவ்வளவே....!

Friday, 28 March 2014


ஜெயலலிதாவின் பிரச்சாரம்....



 

 

சாணக்கியனா இல்லை சகுனியா.....!

25.03.2014.பாராளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த கருணாநிதி மீண்டும் காங்கிரசுடனான கள்ள தொடர்பை வெளிபடுத்தியுள்ளார்....கொதித்து போன தனது தொண்டர்களின் மன நிலையை அறியாமல் செயல்படும் தலைவன் தன் வீரனை தானே கொலை செய்யும் மன்னனாய் ஆனது போல் உள்ளது....பொது மன்னிப்பு வழங்கி மீண்டும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிப்பது கனிமொழி,அழகிரி சமாதானபடுத்தும் நோக்கமே அன்றி வேறில்லை...2011 சட்டமன்ற தேர்தலின் போது கனிமொழியை வழக்கிலிருந்து காப்பாற்றவே 63 தொகுதிகளை கொடுத்து தன் ஆட்சிக்கு தானே சூனியம் வைத்து கொண்டார்...தற்போது அவரது பேச்சு அரசியல் செய்ய பேசப்படும்  பேச்சு அல்ல..இது அவரை கோமாளியாய் சித்தரிக்கும் பேச்சு ஆகும்....26.03.2014 தந்தி டிவியில் விவாதம் நிகழ்ச்சியில் திமுக பேச்சாளர் இந்த ஆதரவு நிலைபாட்டின் கேள்விக்கு பதில் இல்லாமல் 2000-இல் நடந்த கதையை சம்பந்தம் இல்லாமல் உளறியதே இதற்கு சாட்சி...!தேர்தலுக்கு பின் எதிர் வரிசையில் அமர கூட இடம் இல்லாமல் போகும் இவரது இந்த பேச்சு..!


சூனியகாரனனின் திட்டம்......!


    தனது அழுகி போன தக்காளி முகத்தை வைத்து கொண்டு பிஜேபி ஆர் எஸ் எஸ் தூண்டுகோளின் பெயரில் உண்ணாவிரதம் மெழுகுவர்த்தி போராட்டம்  என பல ஸ்டான்ட்டுகளை செய்த அண்ணா ஹசாரே  இப்போது எங்கேயும் தனது அழுகிய உதடுகளை திறப்பதில்லை....கேட்டால் மௌன விரதமாம்...ஏன்?..தான் விரும்பிய பிஜேபி ஆட்சி டெல்லியில் அமையவில்லை என்ற காரணத்தினால்.போட்ட திட்டம் வேறு....எங்கிருந்தோ வந்த கெஜிரிவல் திறமையாக காய் நகர்த்தி 49 நாள் முதல்வராக செயல்பட்டு தற்போது ஊடகங்களால் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் தனது டவுசர் கிழிக்கபட்டதும் அல்லாமல் தற்போது உருவபட்டும் அம்மணமாக நிற்கும் அண்ணா ஹசாரே அடுத்த மெழுகு வர்த்தி போராட்டம் எப்போது....?