சாணக்கியனா இல்லை சகுனியா.....!
25.03.2014.பாராளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த கருணாநிதி மீண்டும் காங்கிரசுடனான கள்ள தொடர்பை வெளிபடுத்தியுள்ளார்....கொதித்து போன தனது தொண்டர்களின் மன நிலையை அறியாமல் செயல்படும் தலைவன் தன் வீரனை தானே கொலை செய்யும் மன்னனாய் ஆனது போல் உள்ளது....பொது மன்னிப்பு வழங்கி மீண்டும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிப்பது கனிமொழி,அழகிரி சமாதானபடுத்தும் நோக்கமே அன்றி வேறில்லை...2011 சட்டமன்ற தேர்தலின் போது கனிமொழியை வழக்கிலிருந்து காப்பாற்றவே 63 தொகுதிகளை கொடுத்து தன் ஆட்சிக்கு தானே சூனியம் வைத்து கொண்டார்...தற்போது அவரது பேச்சு அரசியல் செய்ய பேசப்படும் பேச்சு அல்ல..இது அவரை கோமாளியாய் சித்தரிக்கும் பேச்சு ஆகும்....26.03.2014 தந்தி டிவியில் விவாதம் நிகழ்ச்சியில் திமுக பேச்சாளர் இந்த ஆதரவு நிலைபாட்டின் கேள்விக்கு பதில் இல்லாமல் 2000-இல் நடந்த கதையை சம்பந்தம் இல்லாமல் உளறியதே இதற்கு சாட்சி...!தேர்தலுக்கு பின் எதிர் வரிசையில் அமர கூட இடம் இல்லாமல் போகும் இவரது இந்த பேச்சு..!

No comments:
Post a Comment